News November 11, 2024
ஊட்டி கமிஷனர் மீது லஞ்ச வழக்கு பதிவு

ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கிர் பாட்ஷா, லஞ்ச பணத்துடன் காரில் செல்வதாக வந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி அவரை பின்தொடர்ந்து தொட்டபெட்டா பகுதியில் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து ரூ.11.70 லட்சத்தை பறிமுதல் செய்து, வீடு, அலுவலகத்தில் இருந்து பல ஆவணங்கள் கைப்பற்றினார். இதையடுத்து டிஎஸ்பி ஜெயக்குமார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்து வருவதாக இன்று தெரிவித்தார்.
Similar News
News August 16, 2025
நீலகிரி: டிஜிட்டல் பயிர் சர்வே பணி!

நீலகிரி மக்களே, வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் பயிரிடப்பட்டுள்ள பயிர் விவரங்களை பதிவேற்றம் செய்ய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இந்த பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு ஒரு புல எண்ணிற்கு ரூ.20 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். SHARE பண்ணுங்க!
News August 15, 2025
நீலகிரி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள, 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் <
News August 15, 2025
நீலகிரி: இலவச வீடியோ தொழில்நுட்பம் இலவச பயிற்சி!

நீலகிரி மாவட்டத்தில் பூர்வகுடிகளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தமிழக அரசின் மூலம் இலவச வீடியோ தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பயிற்சியானது, தாட்கோ மூலம் வழங்க இருப்பதால் இந்த இலவச பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 30 வயது உள்ளவர்கள் www.thadco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.