News November 11, 2024

பூண்டு விலை கிலோ ₹500ஆக உயர்வு

image

வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில், பூண்டு விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிலோ வெங்காயம் ₹130 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் பாதிப்பால் இன்னும் சில வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, 1 கிலோ ₹300க்கு விற்கப்பட்ட பூண்டு, தற்போது ₹500க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தை தொடர்ந்து, பூண்டும் விலை உயர்ந்தது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News August 10, 2025

தூக்கத்தில் உங்களை யாராவது அமுக்குகிறார்களா?

image

தூங்கும்போது மார்பு மீது யாராவது ஏறி உட்காருவது போன்றும், அப்போது கை, கால்களை அசைக்கவும் முடியாமல், பேசவும் முடியாமல், மூச்சுத்திணறும் நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இதை sleep paralysis என்கின்றனர். இது 2-3 நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். 30% பேருக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது இப்படி நேர்ந்திருக்கும். இதைக் கண்டு பயப்பட வேண்டாம் என்கின்றனர் டாக்டர்கள். உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?

News August 10, 2025

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரான பரத் கல்யாண்

image

2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெற்றது. தினேஷ், பரத் கல்யான், சிவன் சீனிவாசன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட சுயேட்சையாக தலைவர் பதவிக்கு நகைச்சுவை நடிகை ஆர்த்தி போட்டியிட்டார். 23 பொறுப்புகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பரத் கல்யாண் 491 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

News August 10, 2025

ஆண் – பெண் உறவு இனி இருக்காது: ஆய்வு

image

2050-க்குள், ஆண் – பெண் உறவை விட, Robots உடனான sex சாதாரண ஒன்றாக மாறிவிடும் என Futurologist இயான் பியர்சன் கணித்துள்ளார். Robotics, AI இணைத்து உருவாக்கப்படும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் sex robotகள், 2025-க்குள் பணக்கார வீடுகளில் வரத் தொடங்கிவிடும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் பெண்கள் sex-க்கு ஆண்களை தவிர்த்து, Robots-ஐ விரும்பும் நிலை ஏற்படும் என்கிறார். இது மனிதகுலத்துக்கு நல்ல அறிகுறியா?

error: Content is protected !!