News November 11, 2024
எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் எந்த ஊர் தெரியுமா?

மறைந்த பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜனின் (வயது 66) உடலுக்கு எழுத்தாளர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1958- ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி- இந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் இந்திரா சவுந்தரராஜன். கடந்த 40 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வந்தார். திரைப்படத்துறையிலும் கால்பதித்த அவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
Similar News
News August 28, 2025
சேலம்: செம்ம வாய்ப்பு..உடனே APPLY பண்ணுங்க!

சேலம் மக்களே, National High Speed Rail Corporation Limited காலியாக உள்ள 36 Assistant Technical Manager, Junior Technical Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் இன்று (28.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 28, 2025
சேலம் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

ஆக.29- ல் கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும், ஆக.30- ல் பெங்களூருவில் இருந்து கண்ணூருக்கும் சிறப்பு ரயில்கள் (06125/06126) இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.