News November 11, 2024
நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

ராமநாதபுரம் அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கருத்தசாமி மகன் சங்குநாதன்(39) என்பவர் நிலம் வாங்கி தருவதாக ரூ.86 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தாராம். இது தொடர்பாக ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்குநாதனை கைது செய்தனர். இவர் பாரதி நகர் பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு காயில் சுற்றும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
Similar News
News February 6, 2026
இராமநாதபுரம்: இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.05) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News February 5, 2026
ராமநாதபுரத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல்.!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல்துறைக்கு தொண்டி சோளியக்குடி கடல் வழியாக இலங்கைக்கு 170 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் தகவல் கொடுக்கப்பட்ட சோளியக்குடி கடல் வழியாக கொண்டு சென்ற கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.
News February 5, 2026
ராம்நாடு மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

ராம்நாடு மக்களே., உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <


