News November 11, 2024

மயானத்தில் செல்போன் வெளிச்சத்தில் உடல் அடக்கம் 

image

மதுரை கிழக்கு தொகுதி யா.நரசிங்கத்தில், இறந்த ஒருவரை அடக்கம் செய்ய மயானத்திற்கு நேற்று(நவ.10) கொண்டு சென்றனர். அப்போது மின்சார விளக்குகள் இல்லாத காரணத்தால் செல்போன் வெளிச்சம் மூலம் அடக்கம் செய்துள்ளனர். அப்போது பல நாட்களாக மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் அடக்கம் செய்ய வருபவர்கள் செல்போன் மூலமாக டார்ச் லைட் அடித்து உடல்களை அடக்கம் செய்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Similar News

News August 20, 2025

மதுரை தவெக மாநாடு: டாஸ்மாக் கடைகள் அடைக்க உத்தரவு

image

மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நடைபெறுவதை ஒட்டி திருப்பரங்குன்றம் வட்டத்தில் 14 டாஸ்மாக் கடைகள் அடைக்க என மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவு. கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு சந்திப்பு, திருமங்கலம் உசிலம்பட்டி சந்திப்பு உள்ளிட்ட 10 டாஸ்மாக் கடைகள் மற்றும் 4 தனியார் மதுபான விடுதிகளை ஆகஸ்ட் 21ஆம் தேதி அடக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 20, 2025

BREAKING:மதுரை தவெக மாநாடு -பேனர் வைப்பதில் ஒருவர் பலி

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 19 வயது மாணவன் உயிரிழந்தார். நாளை தமிழக வெற்றி கழத்தின் 2 வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்டம் இனாம்கரிசல்குளத்தில் பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.

News August 20, 2025

மதுரையில் அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் விரைவில் நடைபெறவுள்ள குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுக்கு இலவச பயிற்சிகள் நடைபெறுகிறது. முதல் நிலை தேர்வு செப். 28ல் நடக்கிறது. இத்தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோ.புதூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடந்து வருகிறது, இந்த வகுப்பில் சேர விரும்புவோர் நேரிலோ அல்லது 96989-36868 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!