News November 11, 2024
தர்மபுரிக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் வருகை

தர்மபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் (நவம்பர் 10) நேற்று வருகை தந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மசெல்வன் சால்வை அணிவித்து அமைச்சரை வரவேற்றனர்.
Similar News
News September 24, 2025
தருமபுரி அருகே எஸ்எஸ்ஐயை கைது

தர்மபுரி அருகே, கள்ளக்காதலியை கிணற்றில் தள்ளிய எஸ்எஸ்ஐயை கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டப்பட்டியை சேர்ந்த கோமதி (28) கணவரின் தொல்லை காரணமாக புகார் அளிக்க சென்றபோது ராஜாராமுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவரம் ராஜாரம் மனைவிக்கு தெரிந்தால், பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி கோமதியை கோயிலுக்கு அலைத்து சென்று கிணற்றில் தள்ளி கொல்ல முயன்றுள்ளார். புகாரின் பேரில் ராஜாராமை போலீசார் கைது செய்தனர்.
News September 24, 2025
தருமபுரி அருகே மூதாட்டி சடலமாக மீட்பு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் வனப்பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்திற்கு முன் வேலூர் மாவட்டம் பாகாயம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த விஜயகுமாரை விசாரித்த போது, அவர் தனது உறவினரான வெள்ளச்சி (63) என்ற மூதாட்டியை கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அழுகிய நிலையில் இருந்த மூதாட்டியின் உடல் சிட்லிங் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
News September 24, 2025
தர்மபுரி: மனைவியுடன் தகராறு; உயிரை மாய்த்த Ex.ராணுவ வீரர்

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மனைவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மனம் உடைந்த சுப்பிரமணி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து, தர்மபுரி நகர காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.