News March 20, 2024

ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாக்கெட்டுகள் பறிமுதல்

image

ஜோலார்பேட்டை போலிசார் இன்று(மார்ச்.20) அதிகாலை மாக்கனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து போலீசார் காரை பறிமுதல் செய்து முனியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 31, 2025

ஆம்பூரில் 2 பேர் அதிரடி கைது

image

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் மின் மோட்டாரைத் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்த யோகன் (26) மற்றும் விக்னேஷ் (27) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News December 31, 2025

திருப்பத்தூர்: வீட்டின் அருகில் குடியிருந்த மலைப்பாம்பு!

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமாணப்பள்ளி விநாயகர் கோவில் வட்டத்தை சேர்ந்த செஞ்சி என்பவரின் வீட்டின் அருகில் நேற்று (30) சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

News December 30, 2025

திருப்பத்தூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில்,<> www.tnesevai.tn.gov.in<<>>, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!