News November 10, 2024

தொட்டியம் அருகே தனியார் பள்ளி விடுதியில் சிறுமி தற்கொலை

image

தொட்டியம் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி விடுதியில் சிறுமி ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சனிக்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலை மீண்டும் விடுதிக்கு சிறுமியும், அவரது சகோதரியும் திரும்பியுள்ளனர். இந்நிலையில் விடுதியில் தங்கையை நீண்ட நேரம் காணாததால் அவரது சகோதரி தேடியபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 13, 2026

திருச்சி மாவட்ட MLA-க்களின் தொடர்பு எண்கள்

image

1. திருச்சி மேற்கு – கே.என்.நேரு (98424 66666)
2. திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ் (98409 94094)
3. திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் (98407 02222)
4. ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (94437 89999)
5. மணப்பாறை – அப்துல் சமது (95000 62790)
6. முசிறி – தியாகராஜன் (94438 38388)
7. லால்குடி – சௌந்தரபாண்டியன் (99422 35277)
8. மண்ணச்சநல்லூர் – கதிரவன் (98424 75656)
9. துறையூர் – ஸ்டாலின் குமார் (97878 15511)

News January 13, 2026

திருச்சி: வேட்டையாடிய 5 பேர் அதிரடி கைது

image

வளநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இறந்த நிலையில் 4 மயில்கள் கிடந்துள்ளன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கருப்பசாமி, திருப்–பதி, கார்த்திக், பரத்குமார், கருப்பையா ஆகி–யோர் மயில்களை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News January 13, 2026

திருச்சி: விசைத்தறியாளர்களுக்கு மானியம் அறிவிப்பு

image

விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வழக்கமான தறிகளை தரம் உயர்த்துதல், நாடா இல்லா ரேபியர் தறிகள் கொள்முதல் செய்தல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://tnhandlooms.tn.gov.in/pms என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கைத்தறி உதவி இயக்குனரகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!