News November 10, 2024
கடல் நீர் புகாமலிருக்க தடுப்பு நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 1 ஆவது வார்டு மீனவர் நகரில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் கடல் நீர் தாழ்வான பகுதிகள் வழியாக ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி அப்பகுதியில் மணல் நிரப்பி தாழ்வான பகுதியின் மட்டம் உயர்த்தும் பணியை பேரூராட்சி தலைவர் ராஜா இன்று ஆய்வு செய்தார்.
Similar News
News August 24, 2025
கல்வி உதவித்தொகை பெற அஞ்சல் துறை அழைப்பு

ராமநாதபுரம் இந்திய அஞ்சல் துறையில் தபால் தலை சேகரிப்பு வினாடி- வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.6000 வழங்கப்படுகிறது.இந்திய அஞ்சல் துறை சார்பில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க 6 முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கும் ‘தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டம் செயல்படுகிறது.
News August 24, 2025
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

(23.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். திருவாடானை கீழக்கரை பரமக்குடி ராமநாதபுரம் ராமேஸ்வரம் முதுகுளத்தூர் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அவசர தொடர்புக்கு மேற்கண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
News August 23, 2025
பரமக்குடி: கரப்பான் பூச்சி போல கவிழ்ந்த கார்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து பரமக்குடிக்கு வந்து கொண்டிருந்த கார் இன்று மஞ்சுர் அருகே திருவாடி கிராம பகுதியில் திடீரென நிலை தடுமாறி வாகனம் தலைக்குப்பற அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த நான்கு இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டு சத்திரக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.