News November 10, 2024
மின் நுகர்வோர் புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண்

தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, மின்சார வாரியத்தில் ஏதேனும் புகார்கள் இருந்தால், வாட்ஸ்-அப் எண்களில் தெரிவிக்கலாம். இதற்கான மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்: 94458 55768. எனவே மக்கள் தங்களது புகார்களை மேற்கண்ட எண்ணில் வாட்ஸ்-அப் வழியாக தெரிவித்து பயன்பெறலாம்.
Similar News
News August 16, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 16, 2025
நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம்

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை விழுப்புரத்தில் 7936 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. விலங்குகளின் உமிழ்நீர் மூலம் பரவும் கொடிய நோயான ரேபிஸ் தற்போது அதிகமாக பரவி வருவதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றால் ராபிஸ் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறுகின்றனர்
News August 16, 2025
விழுப்புரத்தில் இந்த விநாயகர் சிலை வைக்க கூடாது!!

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயர்கர் சதூர்த்திக்கு சிலை வைப்போர் கவனத்திற்கு!
▶️ களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகள்
▶️ பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்றவை கலக்கப்படாத சிலைகளுக்கு அனுமதி
▶️ பூசப்படும் வண்ணங்களில் நச்சுப்பொருட்கள், எண்ணெய் சார்ந்த ரசாயனங்கள் கூடாது
உள்ளிட்ட விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் விதித்துள்ளார். சிலை வைக்க திட்டமிட்டுள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க