News March 20, 2024

தருமபுரி: திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுக தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளராக அ.மணி களமிறங்குவதாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து, தருமபுரி திமுக தலைமை அலுவலகத்தில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள், மற்றும் திமுகவினர் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Similar News

News January 26, 2026

தருமபுரி: ரயில் பயணம் செய்பவரா நீங்கள்..?

image

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

தருமபுரி: வீடு கட்டப்போறீங்களா? இது முக்கியம்!

image

தருமபுரி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

தருமபுரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த தொழிலாளி!

image

தருமபுரி மாவட்டம் , இண்டூர் அருகே, மனைவி தந்தை வீட்டிற்கு சென்ற துக்கத்தில் கட்டிட தொழிலாளி தட்சிணாமூர்த்தி (30) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், இண்டூர் போலீசார் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!