News March 20, 2024

திருவாரூரில் நாளை ஆழித்தேரோட்டம்

image

தியாகராஜ சாமி கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா பிப். 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் நாளை (மாா்ச்.21) காலை 5.30 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்பட உள்ளன. தொடர்ந்து காலை 8.50 மணிக்கு மேல் ஆழித்தேர் வடம் பிடிக்க உள்ளது. 

Similar News

News November 4, 2025

திருவாரூர்: மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம்

image

திருவாரூர் ஆட்சியர் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 0 முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நாளை புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்று பயனடைய ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

திருவாரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.<>udyamimitra<<>>.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News November 4, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தபணி ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடங்கியது நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கான புதிய படிவங்களை வழங்கி வருகின்றனர். இந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!