News November 10, 2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவையான உரங்கள் இருப்பு

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தேவையான உரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சம்பா, தாளடி பருவத்திற்கு தேவையான யூரியா உரங்கள், உர நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டு 2900 மெ.டன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 2700 மெட்ரிக் டன் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கும் ஆகக் கூடுதல் 5600 மெட்ரிக்டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
மயிலாடுதுறை: பாம்பு கடித்து பெண் பலி

கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சி கண்டிராஜநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி வசந்தி. இவர் நேற்று வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது வரப்பிலிருந்து விரியன் பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


