News November 10, 2024
விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி?

விஜயபிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். இது குறித்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் பிரேமலதா கூறினார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 4, 2025
மிரட்டலுக்கு அஞ்சோம்… ரஷ்ய ஆயில் வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்; இல்லையெனில் வரிவிதிப்பு மற்றும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வார இறுதியில் கூட ரஷ்யாவிலிருந்து மில்லியன் கணக்கான பேரல்கள் எண்ணெய், இந்திய துறைமுகங்களை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 4, 2025
₹105 கோடியை வசூலித்தது ‘மகாவதாரம் நரசிம்மா’

‘மகாவதாரம் நரசிம்மா’ படத்தின் வசூல் ₹105 கோடியை தாண்டிவிட்டதாக ஹோம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இரணியகசிபு, அவரது மகன் பிரகலாதன், மகா விஷ்ணுவை மையமாக வைத்து புராண அனிமேஷன் படமாக தயாரித்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ‘மகாவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’-ன் கீழ் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரித்து அடுத்தடுத்து வெளியிடவுள்ளது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 4, 2025
திமுகவுக்கு கூட்டணி, அதிமுகவுக்கு மக்கள்: EPS

விவசாயிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், போராட்டம் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு போராட்டக்களமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும் இபிஎஸ் விமர்சித்துள்ளார். பொய் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சியை பிடித்ததாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை என்றும் கூறினார். கூட்டணியை நம்பியுள்ள கட்சி திமுக என்றும், ஆனால் மக்களை நம்பி அதிமுக உள்ளதாகவும் தெரிவித்தார்.