News March 20, 2024
தங்கம் விலை மேலும் உயர்ந்தது

கடந்த வாரங்களில் தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது விலை மளமளவென உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், இன்று ₹40 உயர்ந்து ₹49,120க்கும், கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,140க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹80.00க்கும் கிலோ ₹80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News November 6, 2025
ராகுலுக்கு, பிரஷாந்த் கிஷோர் ஆதரவு

பிஹார் தேர்தலில், காங்கிரஸும், ஜன் சுராஜ் கட்சியும் எதிரெதிராக களம் காண்கின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ECI-க்கு எதிராக ராகுல் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்ற அவர், வாக்குத் திருட்டு பிஹார் தேர்தல் முடிவை மாற்றலாம் என்ற ராகுலின் அச்சத்தை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
News November 6, 2025
பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம்: ஸ்ருதி

பணம் பறிப்பதும், எங்களை பிரிப்பதும் தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வீடு, மாதம் ₹8 லட்சம் வேண்டும் என ஜாய் கிரிசில்டா கேட்பதாகவும், ஊடகங்களை தனிப்பட்ட பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் ஸ்ருதி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கணவருடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 சவரன் காலையில் ₹560 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹11,320-க்கும், 1 சவரன் ₹90,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில நாள்களாக குறைந்துவந்த தங்கம் விலை, இன்று மட்டும் சவரனுக்கு ₹1,120 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


