News November 10, 2024
தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு: விஜய்

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் அதிகமான படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 9, 2025
இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா?

கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ICC-யிடம் போட்ட டீலில் இருந்து Hotstar பின்வாங்க முடிவு செய்துள்ளது. 2024-ல் $3 பில்லியனுக்கு ஹாட்ஸ்டார் போட்ட இந்த டீல் 2027 தான் முடிவடைகிறது. ஆனால் கடுமையான நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னதாகவே ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அந்நிறுவனம் நினைக்கிறதாம். 2026 WC நெருங்குவதால், சோனி, அமேசான், நெட்பிளிக்ஸிடம் ICC பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
News December 9, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்.. வந்தது அலர்ட்

2 நாள்களாக கனமழை இல்லாத நிலையில், இன்று நாகை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. அதோடு, தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
News December 9, 2025
விற்பனையில் தள்ளாடுகிறதா ஜனநாயகன்?

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ வியாபாரம் சரிவர போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘கோட்’ படம் ₹100 கோடிக்கு விற்பனையான நிலையில், இப்படத்தை ₹120 கோடிக்கு விற்க படக்குழு திட்டமிட்டிருந்ததாம். ஆனால், தமிழக விநியோகஸ்தர்கள், நீண்ட இழுபறிக்கு பின்னரே வாங்கினார்களாம். காரணம், விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால், பிற கட்சியினர் படம் பார்க்க வருவார்களா என்ற தயக்கம் உள்ளதாம்.


