News November 10, 2024
டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது இரங்கல் அறிக்கையில், மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைவு செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார். மேலும், தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை குணச்சித்திரப் பத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 4, 2025
விஜய்யுடன் கூட்டணி… ஓபிஎஸ் முக்கிய முடிவு!

NDA கூட்டணியிலிருந்து வெளியேறிய OPS, அடுத்து எந்த கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் செப்.4-ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் OPS தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என கூறப்படுகிறது. திமுகவுடன் இணைய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம், விஜய்யுடன் இணைய ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இதனால், விஜய்யுடன் கைகோர்ப்பது குறித்து அவர் ஆலோசிக்கிறாராம்.
News August 4, 2025
தர்மஸ்தலம் மர்மம்: தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள்

கர்நாடகாவின் தர்மஸ்தலம் கிராமத்தில், பெண்கள், சிறுமிகள் உள்பட பலர் <<17135923>>கொல்லப்பட்டு<<>> புதைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து SIT களமிறங்கியதில் கடந்த வாரம் ஒரு உடலின் எலும்புகள் மட்டும் கிடைத்தது. இந்நிலையில், மேலும் தோண்டிப் பார்த்ததில் இன்று பலரின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இவ்வழக்கில் மேலும் பல மர்மங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 4, 2025
உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது, பொதுவாக கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் உணவுகள் டெலிவரியாகின்றன. பலரும் வீடுகளில் இந்த டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது <<17301267>>மிக ஆபத்தானது<<>> என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகமாம்.