News November 10, 2024
புதுச்சேரியில் ஊர்காவல் படை காவலர் தற்கொலை

புதுச்சேரி நைனார்மண்டபம் குயவர் வீதியைச் சேர்ந்தவர் பொன்னியின் செல்வி, இவரது மகன் வினோத் ஊர்காவல் படை வீரர். அவர் மீது ஆரோவில் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வீட்டில் தூக்க மாத்திரை சாப்பிட்ட வினோத் மயங்கி விழுந்து இறந்தார். புகார்படி முதலியார் பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
புதுச்சேரி: திருப்பணி ஆணை வழங்கிய சபாநாயகர்

அபிஷேகப்பாக்கம் விநாயகர், முத்தாலம்மன், நல்லதம்பி அய்யனார் ஆலய திருப்பணிகள் நடைபெறுவதற்கு குழு அமைக்கப்பட்டது. அதற்கான ஆணையை சபாநாயகர் செல்வம் இன்று வழங்கினார். தலைவராக முருகப்பன், பொருளாளராக சிங்கிரிக்குடி பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரி, தாசில்தார் பிரித்திவி மற்றும் 21 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை திருப்பணி குழு தலைவர் முருகப்பன் மற்றும் உறுப்பினர் பெற்றுக் கொண்டனர்.
News December 7, 2025
புதுச்சேரி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

புதுச்சேரி மக்களே நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
புதுவை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <


