News November 10, 2024

மயிலாடுதுறை: முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க <>லிங்க்<<>> என்ற இணையதளம் மூலம் வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 9, 2025

மயிலாடுதுறை: இறந்து கரை ஒதுங்கிய டால்ஃபின் – சோகம்

image

மயிலாடுதுறை மாவட்டம் கொட்டாய்மேடு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இறந்த நிலையில் டால்ஃபின் மீன் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இதனை அறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீசார், இறந்த டால்பின் மீன் ஒதுங்கியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அதனை அப்புறப்படுத்துவதற்காக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். டால்பிஃன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 9, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News December 9, 2025

மயிலாடுதுறையில் பெருமைமிக்க அருங்காட்சியம்!

image

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் ஆகும். இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், புத்தர் சிலை, சிலம்பு, அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள் போன்றவை உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!