News March 20, 2024
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி வாக்குறுதி

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை முதல் நெல்லை, கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. பின்னர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு, அது நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா

ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, படத்தின் போஸ்டர்களில் கூட போட்டோ இருக்காது என்று அவர் கூறியுள்ளார். ‘சந்திரமுகி’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட வெற்றி படங்களில் அவரது போட்டோ போஸ்டர்களில் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி, வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை மறக்க வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News August 30, 2025
முகப்பருவும்.. உடல்நல பிரச்னையும்!

உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கும் முகத்தில் வரும் முகப்பருவுக்கும் தொடர்பு இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
*நெற்றியில் வந்தால், செரிமான பிரச்னை.
*காதில் வந்தால் கிட்னி கோளாறு.
கண் இமைகள் அருகே வந்தால், கல்லீரல் கோளாறு
*கன்னத்தில் முகப்பரு வந்தால், ஹார்மோன் அல்லது நுரையீரலில் பிரச்னைகளாக இருக்கலாம். *மூக்கில் முகப்பரு வந்தால், இதய பிரச்னையாக வரலாம் என்கின்றனர். SHARE IT.
News August 30, 2025
BREAKING: ஆயுதபூஜை விடுமுறை.. ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நாடு முழுவதும் 150 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 21 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக தென் மத்திய ரயில்வேயில் 48 ரயில்களும், குறைந்த பட்சமாக தெற்கு ரயில்வேயில் 10 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. சென்னை, மதுரை, கோவை வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.