News November 10, 2024
கம்பீரின் தலைமை பதவிக்கு ஆபத்து?

டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீரை விடுவிக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால், IND அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை IND அணி வெல்லாவிட்டால் கம்பீர் கழற்றி விடப்படுவார் என கிரிக்கெட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
Similar News
News December 13, 2025
அரசியலில் குதித்த ராமதாஸின் அடுத்த வாரிசு

பாமகவில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு இடையே ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான சுகுந்தனையும் ராமதாஸ் களமிறக்கியுள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக, முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கியதே ராமதாஸ் – அன்புமணி இடையே சண்டை வளர முக்கிய காரணமாக அமைந்தது.
News December 13, 2025
தமிழ் நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணம்

தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்ட சீரியல் நடிகை <<18544425>>ராஜேஸ்வரி<<>>, வீட்டின் குத்தகை தொகை ₹13 லட்சத்தை பயன்படுத்த நினைத்திருக்கிறார். இதற்கு கணவர் சதீஷ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமான BP மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது முடியும்?

சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் பணிகள் பெயரளவிலேயே இருப்பதாக <<18474670>>CM ஸ்டாலின்<<>> விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஹாஸ்பிடலுக்கு இதுவரை ₹421.02 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பதிலளித்த அவர், நவ.30, 2025 படி, 42% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026, அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.


