News November 10, 2024
மத்திய கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை பெற விண்ணப்பம் பதிவு

மத்திய அரசு கல்வி நிறுவனம் நிறுவனங்களான IIT,IIM,IIT,NIT மற்றும் மதிய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த (BC,MBC/DNC) மாணவ மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தலுக்காக விரும்பும் தகுதியான மாணவர்கள்tngovtitsscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து 15/01/2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். என நவ.9 தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
தருமபுரி: கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 7ஆண்டு சிறை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால், வெங்கட்டம்மாள் என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற விவசாயி கிருஷ்ணனுக்கு (50), 7ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மோனிகா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 2021-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
News November 22, 2025
தருமபுரி: போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (நவம்பர்-22) சுகாதார ஆய்வாளர்களுக்கு போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு -1 காலை 10:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வில் உடற்கூறியில், பூச்சியில், ஒட்டுண்ணியியல், நுண்ணுயிரியல், பொது சுகாதார சட்டம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பிரிவுகள் இடம் பெற உள்ளது. எனவே மாணவர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தல்.
News November 22, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.21) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


