News March 20, 2024
திமுக – அதிமுக: 8 தொகுதிகளில் நேருக்கு நேர்

அதிமுக முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், அதிமுக – காங்கிரஸ் 2 தொகுதியிலும், (கிருஷ்ணகிரி, கரூர்), அதிமுக – விசிக 2 தொகுதியிலும் (சிதம்பரம், விழுப்புரம்) நேரடியாக மோதுகின்றன. அதிமுக மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தபின் இந்த எண்ணிக்கை மாறலாம்.
Similar News
News September 14, 2025
நிலைபாட்டை மாற்றிய இந்தியா

அணிசேரா நாடுகளின் தலைவனாக இந்தியா திகழ்ந்த காலத்தில், பாலஸ்தீன சுதந்திரத்துக்கு தீவிர ஆதரவளித்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், அமெரிக்க நாடுகளுடன் நெருக்கமான நிலையில், ஐநாவில் பாலஸ்தீனம் தொடர்பான தீர்மானம் வரும்போது வாக்கெடுப்புகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தது. ஆனால், நேற்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், இந்தியா பழைய நிலைப்பாட்டுக்கு திரும்பியுள்ளதாக கூறுகின்றனர்.
News September 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 14, 2025
பாராட்டு விழாவை நம்ப முடியவில்லை: இளையராஜா

இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு <<17700409>>பாராட்டு விழா <<>>நடத்தியது தமிழக அரசுதான் என இளையராஜா தெரிவித்தார். சிம்பொனி இசையமைக்க செல்லும் முன்னே CM ஸ்டாலின் நேரில் வாழ்த்தியதாக கூறிய அவர், இன்று பாராட்டு விழா நடத்தியதை நம்ப முடியவில்லை என கூறினார். தனக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்னாள் CM கருணாநிதிதான் கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.