News November 9, 2024
கடைக்குச் சென்று கேக், பிஸ்கட்டுகள் வாங்கிய முதல்வர்

விருதுநகர் சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற வழியில் காப்பகத்தில் தங்கி உள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக சூலக்கரை மேட்டில் உள்ள பேக்கரிக்கு சென்று கேக் மற்றும் பிஸ்கட்டுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாங்கினார். முதலமைச்சர் கேக் வாங்கிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Similar News
News October 25, 2025
விருதுநகரில் 450 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் 01.11.2025 உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
BREAKING விருதுநகரில் சுட்டுக் கொன்ற வனத்துறை

விருதுநகர் தாலுகா மன்னார்குடியில் விவசாய நிலத்தை காட்டுபன்றி சேதப்படுத்துவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஸ்ரீவி – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் செல்லமணி, வனவர்கள் கார்த்திக்ராஜா, பெரியசாமி, வனக்காப்பாளர்கள் மாயதுரை, ஜார்ஜ் குட்டி மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கொண்ட குழுவினர் ஒன்றரை வயது பெண் காட்டுப்பன்றியை இன்று சுட்டுக் கொன்றனர்.
News October 24, 2025
விருதுநகரில் உரிமம் பெற வேண்டியது அவசியம் – ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் 30.10.2025 அன்று நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவிற்கும், இது போன்ற மற்ற விழாக்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் முன் அனுமதியும், உரிமமும் பெற வேண்டியது அவசியமாகும். உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும். தவறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


