News November 9, 2024
மதுரையில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாநகர் பகுதியில் இன்று (நவ.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் இரவு நேரத்தில் குற்ற சம்பவங்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
மதுரை: தொழில்முனைவோர் ஆகுறது உங்க கனவா?

மதுரை வாசிகளே! தொழில் முனைவோர்களை ஊக்கபடுத்தும் விதமாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம். இதற்கு விண்ணப்பித்து உங்கள் தொழில் முனைவோர் கனவை நினைவாக்குங்கள். இங்கு <
News December 24, 2025
போதையில் வீட்டுப் படியில் தடுமாறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாண்டியராஜ்(32). எலக்ட்ரீசியனான இவர் மது போதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் முழு போதையில் வீட்டிற்கு வந்தவர் வீட்டுப் படி ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 24, 2025
மதுரை: கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்

கள்ளிக்குடி செங்கப்படையை சேர்ந்தவர் மூர்த்தி(56). இவர் தன் மனைவி சரஸ்வதியுடன் பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தார். ரெங்கப்பநாயக்கர் ஊரணி அருகே சென்ற போது பைக்கில் இருந்து மனைவி கீழே விழுந்தார். தலையில் பலமாக அடிபட்ட நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்தார். விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


