News November 9, 2024

விழுப்புரம் அருகே விபத்தில் மரணம் 

image

விழுப்புரம் சாலை அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் நேற்று தனது ஒன்றரை வயது பேரன் லட்சித்தை பைக்கில் அமர வைத்து சாலை அகரம் கெங்கையம்மன் கோவில் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த சங்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குழந்தை லட்சித் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

விழுப்புரம் மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…

image

விழுப்புரம் மக்களே மற்றவர்கள் உங்கள் செல்போனை ஹேக் செய்வதில் இருந்து பாதுகாக்க சில டிப்ஸ் பற்றி காண்போம். ▶️ ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் ஆப்ஸைப் பதிவிறக்கவும் ▶️பொது வைஃபையைப் பயன்படுத்த வேண்டாம் ▶️passwords-யை மொபைல் போனில் சேமித்து வைக்க வேண்டாம் ▶️ உங்கள் ஆப்ஸைப்பை எப்போது அப்டேட்டில் வைத்திருங்கள். மேலும் புகாரளிக்க <>இந்த இணையதளம்<<>> அல்லது 1930 எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் IT

News August 17, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.16) இரவு முதல் இன்று (ஆக.17) காலை வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News August 16, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!