News March 20, 2024
சமையல் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்

I.N.D.I.A. கூட்டணி அரசு மத்தியில் அமைந்தால், சமையல் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படுமென திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். வங்கியில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் பிடிக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 31, 2025
தமிழ் தலைவாஸ் அணி முதல் தோல்வி

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ்(TT) அணி முதல் தோல்வியை தழுவியது. யு மும்பை அணிக்கு எதிரான மோதலின் முதல் பாதியில் TT அணி 14-11 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியின் கடைசி 10 நிமிடங்களில் முன்னிலையை தக்க வைக்க தவறியதால் 36-33 என்ற கணக்கில் யு மும்பை வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அர்ஜூன் தேஷ்வால் 12 புள்ளிகள் எடுத்தார். TT தனது அடுத்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது.
News August 31, 2025
டிரம்ப்புக்கு என்னாச்சு?.. LATEST PHOTOS

டிரம்ப் இறந்துவிட்டார் என்று ஹேஷ்டேக்கில், 57,000 பதிவுகள் X-ல் போடப்பட்டுள்ளன. இது உண்மையல்ல என்று வெள்ளை மாளிகையும் டிரம்ப்பும் விளக்கம் அளித்தாலும், அவரின் உடல்நிலை பற்றி பல செய்திகள் உலா வருகின்றன. டிரம்ப்பின் லேட்டஸ்ட் photos-ஐ ஆய்வுசெய்த நெட்டிசன்கள், அவர் கைகளில் தழும்புகளும், அதை அவர் மேக்-அப்பால் மறைப்பதையும் பார்த்து, அவருக்கு தீவிர ரத்தநாள பாதிப்பு இருப்பதாக சொல்கின்றனர். எது உண்மை?
News August 31, 2025
இனி எலெக்ட்ரிக் கார்களின் விலை உயரும்?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் செப்., 3 – 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் எலெக்ட்ரிக் கார்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 5% இருக்கும் நிலையில், அதை 18% உயர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ₹20 முதல் ₹40 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் கார்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ₹20 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கான ஜிஎஸ்டி 5% சதவீதமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.