News March 20, 2024
கோவை, பொள்ளாச்சி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக ஈஸ்வர சாமியும், கோவை மக்களவைத் தொகுதிக்கு கணபதி ராஜ்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 14, 2025
கோவை: உள்ளூரில் வேலை வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும் HRH Next Service Company நிறுவனத்தில் Customer Service Associate (வாடிக்கையாளர் சேவை அதிகாரி) பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ரூ.7,500 முதல் ரூ.14,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி (அ) டிப்ளமோ முடித்தவர்கள் நவ.30ம் தேதிக்குள் <
News November 14, 2025
BREAKING கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், டவுன்ஹால் மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணமாகவே உள்ளன. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அங்குலம்,அங்குலமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
News November 14, 2025
வால்பாறை மாணவி மாநில போட்டிக்கு தேர்வு!

வால்பாறை ஒன்றியத்தில் நடந்த கலைத்திருவிழாவில், 68 பள்ளிகளை சேர்ந்த, 350 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதில், வால்பாறை அரசு உதவி பெறும் துாய இருதய ஆரம்ப பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி தர்ஷிகா, வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, மாநில அளவு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து மாணவிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


