News March 20, 2024
சென்னை: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

வடசென்னை மக்களவை தொகுதிக்கு கலாநிதி வீராசாமி, தென் சென்னைக்கு தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னைக்கு தயாநிதிமாறன் ஆகியோர் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல்-2024 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 8, 2025
சென்னையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாநில கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார். மாநில கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. குழுவின் அறிக்கை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில், இன்று கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.
News August 8, 2025
சென்னை SBI வங்கிகளில் வேலை…

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். சென்னையில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <