News March 20, 2024

புது முகங்களை களமிறக்கிய அதிமுக

image

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட மக்களவைத் தேர்தல் வேட்பாளர் முதல் பட்டியலில் 16 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஜெயவர்த்தன், ராயபுரம் மனோகரன் தவிர்த்து மற்ற 14 பேரும் புது முக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மருத்துவர்கள், 2 பொறியியலாளர்கள், 3 வழக்குரைஞர்கள், ஒரு முனைவர் என 16 பேரும் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டயங்களை பெற்ற நன்கு படித்த பட்டதாரிகளாக உள்ளனர்.

Similar News

News December 30, 2025

அதிமுக அடிமை கட்சி தான்: அண்ணாமலை

image

‘அதிமுக அடிமை கட்சி’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ‘என்னை பொறுத்தவரை அதிமுகவும் அடிமை தான், NDA கூட்டணியும் அடிமை தான். யாருக்கு அடிமை? மக்களுக்கு அடிமை’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை எஜமானர்களாக நினைத்து, அவர்களுக்காக சேவை செய்யும் கூட்டணியை அடிமை என சொன்னால், அதை பெருமையாக நினைத்து வேலை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 30, 2025

‘புதிய கல்விக்கொள்கையை TN மக்கள் ஏற்றுள்ளனர்’

image

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறும் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை TN மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய அவர், தமிழக அரசு ஏற்காவிட்டாலும், அவர்களுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

News December 30, 2025

வங்கியில் வேலை: டிகிரி போதும், ₹24,000 சம்பளம்!

image

➤Nainital Bank Limited காலியாக உள்ள Customer Service Associate, Probationary Officers உள்ளிட்ட 185 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ➤கல்வித்தகுதி: டிகிரி ☆வயது: 21 – 32 வரை ➤தேர்ச்சி முறை: Written test, Personal Interview ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.2026 ➤சம்பளம்: ₹24,050 – ₹93,960 ➤முழு தகவலுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை பகிரவும்.

error: Content is protected !!