News March 20, 2024
கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியின் வேட்பாளராக மலையரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 8, 2025
கள்ளக்குறிச்சி: குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் 09.08.2025 அன்று குடும்ப அட்டை குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் பெயர் சேர்த்தல் முகவரி மாற்றம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல் போன்ற அனைத்து விதமான சேவைகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இந்த குடும்ப அட்டை சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News August 8, 2025
கள்ளக்குறிச்சி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 2/2

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
News August 8, 2025
கள்ளக்குறிச்சி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 1/2

கள்ளக்குறிச்சி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <