News November 9, 2024

தேசிய ஆணைய உறுப்பினர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நேற்று (08.11.2024) ஆதிதிராவிடர் மக்களுக்கு அனைத்து துறைகளிலும் செயல்படுத்தும் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் பட்டியல் இனத்தவர்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் வடேபள்ளி ராமசந்தர் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்தனர்.

Similar News

News August 19, 2025

காஞ்சிபுரத்தில் டிகிரி இருந்தால் வங்கி வேலை…

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <>www.ibps.in <<>>என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். உடனே விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News August 19, 2025

காஞ்சிபுரம் மாவட்டம் வெற்றி!

image

திருவண்ணாமலை மாவட்டம், துாசி கிராமத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர். அதில், 22 மாணவர்கள் முதல் இடம், 14 மாணவர்கள் 2ஆம் இடம், 11 மாணவர்கள் 3ஆம் இடம் என வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

News August 19, 2025

காஞ்சி: கணவனை கொல்ல கூலிப்படை ஏவிய மனைவி

image

மேவலூர்குப்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பவானிக்கு கடையில் வேலை செய்யும் மதன் என்பவரோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஹரி இருவரையும் பிரித்துள்ளார். பிரிவை தாங்க முடியாத இருவரும் கூலிப்படைக்கு பணம் தந்து ஹரியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ஹரி காவல்துறையில் புகார் அளித்த பெயரில் பவானி மற்றும் மதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!