News March 20, 2024
தென்காசி திமுக வேட்பாளர் இவர்தான்

திமுக சார்பில் தென்காசி மக்களவை தொகுதியின் வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 25, 2025
வேளாண் வணிக திருவிழாவில் கலந்து கொள்ளலாம் – ஆட்சியர்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 27.09.2025 அன்று காலை 10:30 மணியளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழாவை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதால் விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் வணிகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தகவல்.
News September 25, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு

தென்காசி மாவட்டத்தில் 2025 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் 8834 ஹெக்டர், சிறுதானியங்கள் 4365 ஹெக்டர். பயறு வகைகள் 530 ஹெக்டேர் பருத்தி 592, கரும்பு 662 ஹெக்டர், எண்ணெய் வித்து 1044 ஹெக்டேர். பழங்கள் 9716 ஹெக்டேர், காய்கறிகள் 2582 ஹெக்டேர். வாசனைப் பயிர்கள் 497 ஹெக்டேர், மலைப்பயிர்கள் 13794 ஹெக்டேர். பூக்கள் 461 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது.
News September 25, 2025
தென்காசியை சேர்ந்தவருக்கு கலைமாமணி விருது

தென்காசி, கீழப்பாவூர் வட்டார கிராமிய வில்லிசை கலைஞர்களின் முன்னேற்ற சங்க தலைவரான மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் ஜெகநாதன் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மாவட்ட அளவில் கலை சுடர்மணி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.