News March 20, 2024
விழுப்புரம்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல்-2024 தமிழகத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று (மார்ச் 20) வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, விழுப்புரம் எம்பி தொகுதியின் வேட்பாளராக விழுப்புரம் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜெ.பாக்யராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
விழுப்புரம்: இளைஞர் மீது குண்டாஸ்!

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்பக்காடு அருகே விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைமாற்றிய வழக்கில் மழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரையின் பேரில் நேற்று(நவ.9) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News November 9, 2025
விழுப்புரம்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க
News November 9, 2025
விழுப்புரம்: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).


