News November 8, 2024

குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

image

தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகின்றது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை(9.11.2024) காலை 8.30 கனமழை முதல் மிககனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

குமரி ஆட்சியர் இன்று ஆய்வு நடத்தும் இடங்கள்

image

இன்று (நவ.20) காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை “உங்களை தேடி உங்கள் ஊரில் ” திட்டப்படி மாவட்ட ஆட்சியர் அழக மீனா ஆய்வு நடத்தும் இடங்கள்: வேர்க்கிளம்பி பேரூராட்சி அலுவலகம், குமரன்குடி கிராம நிர்வாக அலுவலகம், PACB, அங்கன்வாடி, திருவட்டார் பஸ் நிலையம், காவல் நிலையம், சார்பதிவகம், G.H.S. அரசு பணிமனை, குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்பு நிலையம், பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையம், வானிலை மையம்.

News November 19, 2024

சுசீந்திரம் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஶ்ரீ தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இன்று (நவ.19) நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். மேலும் அங்குள்ள சுற்று பிரகாரத்தை சுற்றி மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

News November 19, 2024

குமரியில் திடீர் ஆய்வு – 11 கடைகளுக்கு அபராதம்

image

குமரி பேரூராட்சி & உணவு பாதுகாப்பு துறை இணைந்து குமரியில் உள்ள கடைகள், தற்காலிக உணவு கடை என 60 கடைகளில் இன்று (நவ.19) ஆய்வு நடத்தியது. இதில் 7 கிலோ பிளாஸ்டிக் பை, 18 கிபிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதலுடன், காகிதத்தில் வைத்த 5 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா உணவு அழிக்கப்பட்டன. சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு ரூ. 3000 அபராதமும், பிளாஸ்டிக் வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா 2000 வீதம் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டது.