News November 8, 2024

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது-ஜிகே வாசன்

image

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அரசியல் கட்சிகள் நினைப்பது தவறு கிடையாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 1999 ஆம் ஆண்டு மூப்பனார் தலைமையில் கூட்டணி அமைந்த போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று எடுத்துரைக்கப்பட்டது என்றார். மேலும் மதுரையின் “மைல் கல்லாக” எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News August 20, 2025

மதுரை த.வெ.க மாநாடு ஒரு பார்வை

image

3000 போலீசார் பாதுகாப்பு
2000 பவுன்சர்கள்
1.50 லட்சம் நாற்காலி
400 நடமாடும் கழப்பறை
உள்ளே வெளியே செல்வதற்கு 18 வழித்தடங்கள்-12 அவசர கால வழிகள்
1 லட்சம் மினரல் வாட்டர் பாட்டில்கள்
zone wise 1000 லிட்டர் குடிநீர் தொட்டி
400 மீட்டர் நீளத்திற்கு ராம்ப்வாக் மேடை
15 முதலுதவி மையங்கள்

News August 20, 2025

BREAKING: மதுரையில் 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு

image

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ், பேனர்களை ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மதுரை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட்.21) தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பட வெளியீட்டின் போது வைக்கப்படும் பிரம்மாண்டமான பேனர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன என நீதிபதிகள் கருத்து.

News August 20, 2025

BREAKING: மதுரையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

image

மதுரையில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் 2 வது மாநில மாநாடு பாரப்பத்தியில் நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள எலியார்றுபத்தி , வலையங்குளம், காரியாபட்டி இந்த இடங்களில் நாளை நடைபெறும் மாநாட்டினால் மதுரை-தூத்துக்குடி சாலையில் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது.இதனால் அந்த இடத்தை சுற்றியுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவை தனியார் பள்ளிகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!