News November 8, 2024

சவிதா கல்லூரியில் மழைநீர் தேக்கம்: மாணவர்கள் அவதி

image

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்கால் கனமழை பெய்தது. இந்த கனமழையால், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், தற்காலிகமாக அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Similar News

News August 13, 2025

“உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்”

image

காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” நடைபெற்து. இம்முகாமை கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு இம்முகாமை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை மற்றும் பட்டா கோரி மனு அளித்தனர்.

News August 13, 2025

காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <>இணையதளத்தில்,<<>> உங்கள் EPIC எண்ணை பதிவிட்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். ஏதாவது புகார் இருந்தால் அதே இணையதளத்தில் உள்ள அதிகாரிகளை (ERO/BLO) தொடர்பு கொள்ளுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 13, 2025

APPLY NOW: காஞ்சிபுரம் கூட்டுறவு துறையில் வேலை

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையின் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலிப் பணியிடங்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் 49 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <>இணையதளத்தில்<<>> வரும் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9043046100 எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!