News November 8, 2024
10 நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருவதால் மக்கள் அவதி

பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி 9வது வார்டு ஆர்.எஸ்.புரம் தெருவில் பத்து நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வழங்குவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News July 9, 2025
கம்பம்: தாய் திட்டியதால் இளைஞர் தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (26). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அஜித் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் நேற்று (ஜூலை.8) வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News July 8, 2025
இதெல்லாம் நம்பாதீங்க – தேனி மாவட்ட காவல்துறை

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு செல்போனில் வரும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வரும் போலி குறுஞ்செய்தி, லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும் இதனால் வங்கி கணக்குகளிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கபடும் எனவும் தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News July 8, 2025
தேனியில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 9ம் தேதி முதல்15ம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் கொண்டாடபட உள்ளது. வேலைதேடும் இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி (04546 254510) எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.