News November 8, 2024

தாரமங்கலம்: பள்ளியில் கிரிக்கெட் வீரர் நடராஜன்

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன், இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். இவர் தனது மகள் பிறந்தநாளை தாரமங்கலம் எக்காம்வெல் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் நேற்று கொண்டாடினார். பள்ளி நிர்வாகிகள் லாரன்ஸ், ஜூலி ஆகியோர், நடராஜன் குடும்பத்தினரை வரவேற்று, குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நடராஜனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Similar News

News August 18, 2025

சேலத்தில் 2,776 தேர்வர்கள் ஆப்சென்ட்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக சேலத்தில் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 6,592 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 3,816 பேர் மட்டுமே எழுதினர். 2,776 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 18, 2025

சேலம்: டிகிரி முடித்திருந்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

image

சேலம் மக்களே.. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 08.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 18, 2025

அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை

image

கருமந்துறை அரசு பழங்குடியினா் ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி வெளியிட்டார். கருமந்துறை அரசு பழங்குடியினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2025 ஆம் ஆண்டு பயிற்சிக்கு பழங்குடியின மாணவ, மாணவிகள் சோ்க்கை 100 சதவீதம் இலக்கை அடையும் வகையில் நேரடி சோ்க்கைக்கு வரும் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நிடிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!