News March 20, 2024
மீண்டும் பயணத்தை தொடங்கிய அஜித்

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில், பைக்கில் உலகம் சுற்றிவரும் தனது பயணத்தை அவர் மீண்டும் தொடங்கியுள்ளார். அஜித் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மேலாளர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
சேலத்தில் அடிதடி தகராறு: 17 பேர் மீது வழக்கு

சேலம் கல்பகனூரில் திருவிழா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் வசூலில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ் குமார் தரப்பினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News March 11, 2026
இப்படி கூட கேஸ் மிச்சம் பண்ணலாம்

சமையலின் போது கேஸ் மிச்சப்படுத்துவதற்கான சில ட்ரிக்ஸ் *குக்கரில் முதல் விசில் அடித்தவுடன் தீயை மீடியம் பிளேமிற்கு மாற்றவும் *குக்கரில் 2-3 அடுக்குகள் பயன்படுத்தி ஒரே நேரத்தில் சாதம், பருப்பு, காய்கறிகளை வேக வைக்கலாம் *சிறிய பர்னரை உபயோகிக்கவும் *பிரிட்ஜில் இருந்த உணவுகளின் Chillness சற்று குறைந்த பிறகு சூடுபடுத்தவும் *கொண்டைக்கடலை, அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து பிறகு சமைக்கவும்.
News March 11, 2026
நடிகர் சீனிவாசன் காலமானார்.. சோகமான தகவல்

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட <<19351093>>தக்காளி சீனிவாசனை<<>> தமிழ் சினிமா இழந்துள்ளது. நீண்ட கால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உயிரை எமன் பறித்துச் சென்றார். தனது இறுதிக் காலத்தை பெங்களூருவில் கழித்த அவர், ஆசிரமம் நடத்தி பல குழந்தைகளை தத்தெடுத்து மனிதநேய சேவையாற்றி வந்தார். தற்போது, சீனிவாசனை இழந்து ஆசிரம குழந்தைகள் சோகத்தில் மூழ்கியிருப்பது பெரும் வேதனை.


