News March 20, 2024
இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
Similar News
News November 19, 2024
கீரமங்கலத்தில் அமைச்சர் ஆய்வு
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, கீரமங்கலம் பேரூராட்சி மேலக்காடு முஸ்லிம் ஜமாத்தார்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் தனியாக தொழுகை நடத்துவதற்கு ஏதுவாக செட் அமைப்பதற்கான இடத்தை, தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியக்குழு மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
News November 19, 2024
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் போராட்டத்தின் எதிரொலி
கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவின் மூலம் காவலர்கள், நோயாளிகளையும், பொதுமக்களையும் சோதனை செய்த பின்னர் அனுமதித்து வருகின்றனர். இது மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
News November 18, 2024
புதுகையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம்தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.