News November 7, 2024

இனி ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை

image

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையம் நவீனமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாய் கருத்தடை அறுவை சிகிச்சை ஆண்டுக்கு 27 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News September 11, 2025

பூவை ஜெகன் மூர்த்தி கடத்தல் வழக்கு ஒத்திவைப்பு

image

சிறுவனை கடத்தியதாக பூவை ஜெகன்மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பெண்ணின் தந்தை வனராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது வழக்கு விசாரணை செப்.17 ஒத்திவைக்கப்பட்டது.

News September 11, 2025

சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொகையை செலுத்தினால் மட்டுமே இன்சுரன்ஸ் புதுபிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. அபராத நிலுவை தொகை ரூ.300 கோடி நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன பரிவாஹன் என அனைத்து இன்சூரன்ஸ் இணைந்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 11, 2025

சென்னையில் தூய்மை பணியாளர்களின் சம்பளம் உயர்வு

image

ராயபுரம் மற்றும் திருவி.க.நகர் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் தினசம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி பணியின் வகைபோல் தினசம்பளம் ரூ.761 முதல் ரூ.965 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத வருமானம் சுமார் ரூ.19,700 முதல் ரூ.25,000 இருக்கும். ஊழியர்களுக்கு கட்டண விடுப்பு, காப்பீடு, மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவைகளும் வழங்கப்பட உள்ளன.

error: Content is protected !!