News November 7, 2024
பாலமுருகனுக்கு ஐந்தாவது நாள் கந்த சஷ்டி விழா

ஶ்ரீலஶ்ரீ திருப்பதி சுவாமிகள் மடாலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பாலமுருகனுக்கு கந்தர் சஷ்டி விழாவின் ஐந்தாவது நாளான இன்று சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆராதனைகள் 6 நாட்களும் நடைபெறும். அது சமயம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பாலமுருகனின் அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
Similar News
News August 13, 2025
கரூரில் ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 13, 2025
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 18 மற்றும் 19 பகுதிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில், இன்று (13.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் துணை மேயர் ப.சரவணன் ஆகியோர் உள்ளனர்.
News August 13, 2025
கரூர்:தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இலவச திறன் பயிற்சி!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கரூர் உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து மெர்ச்சன்டைசர் குவாலிட்டி கன்ட்ரோல், மற்றும் இன்ஸ்பெக்சன் ஹோம் டெக்ஸ்டைல்ஸ், போன்ற பயிற்சிகள் 100 சதவீதம் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் புகளூர் பகுதியில் பயிற்சி நடத்தப்பட இருகின்றன. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 9489736687 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.