News November 7, 2024
பட்டய கணக்காளர் தேர்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்-இடைநிலை, நிறுவன செயலாளர்-இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்-இடைநிலை ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
BREAKING: மதுரை வந்தடைந்தார் விஜய்!

மதுரை பாரப்பத்தியில் நாளை நடைபெறும் தவெக வின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் மதுரை வந்தடைந்தார். காரின் மூலம் சாலை மார்கமாக புறப்பட்டு மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். தவெக தலைவர் விஜய் இரவு தனியார் ஹோட்டலில் தங்கி நாளை தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறார் .
News August 20, 2025
மதுரை த.வெ.க மாநாடு ஒரு பார்வை

3000 போலீசார் பாதுகாப்பு
2000 பவுன்சர்கள்
1.50 லட்சம் நாற்காலி
400 நடமாடும் கழப்பறை
உள்ளே வெளியே செல்வதற்கு 18 வழித்தடங்கள்-12 அவசர கால வழிகள்
1 லட்சம் மினரல் வாட்டர் பாட்டில்கள்
zone wise 1000 லிட்டர் குடிநீர் தொட்டி
400 மீட்டர் நீளத்திற்கு ராம்ப்வாக் மேடை
15 முதலுதவி மையங்கள்
News August 20, 2025
BREAKING: மதுரையில் 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ், பேனர்களை ஒரு மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மதுரை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட்.21) தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பட வெளியீட்டின் போது வைக்கப்படும் பிரம்மாண்டமான பேனர்களால் விபத்துகள் ஏற்படுகின்றன என நீதிபதிகள் கருத்து.