News March 20, 2024
இளம் விஞ்ஞானிகள் திட்டம்: இன்றே கடைசி நாள்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்.
Similar News
News December 9, 2025
சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் வருடாந்திர ஆய்வு

சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் இன்று (டிச.09) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் பா.மூர்த்தி, வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் உடை பொருட்கள், உபகரணங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து காவல் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன. பின்னர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
News December 9, 2025
சாலை கிராமம் பேருந்து நிலைய பணியை பார்வையிட்ட எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமத்தில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதை இன்று மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News December 9, 2025
சிவகங்கை பயணிகளின் கனிவான கவனத்திற்கு

சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) வியாழன் சனி ஞாயிறு மட்டும் இயங்கும் ரயில் சேவை சிவகங்கை ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மானாமதுரை
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி வழி இரவு 9 மணிக்கு புதுக்கோட்டை திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வரை செல்லும்.


