News March 20, 2024
இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<
Similar News
News April 9, 2025
கரூர் ‘குடி’மகன்களே உஷார்;10-ம் தேதி மது கிடைக்காது!

கரூர் மாவட்டத்தில் நாளை மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் FL2 உரிமம் பெற்ற ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் மதுக்கூடத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 9, 2025
க.பரமத்தியில் 96.8 டிகிரி செல்சியஸ் பதிவு

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று, அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டாம்.
News April 8, 2025
கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.