News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க <
Similar News
News August 12, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.12) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News August 12, 2025
நோய்களை நீக்கும் கோவை வாதப் பிள்ளையார்!

கோவை கோட்டப்பாளையத்தில் வாதப் பிள்ளையார் கோயில் உள்ளது. சுயம்பு மூர்த்தியாக உள்ள பிள்ளையாரை வணங்கி, அவரின் மீது படிந்திருக்கும் நல்லெண்ணெயை எடுத்து தடவி வந்தால், வாதம், நரம்பு, மூட்டுநோய்கள் குணமாகுமாம். ஒரு நூல் கண்டு வாங்கி, நூலின் ஒரு முனையை ஒரு சூலத்தில் கட்டிவிட்டு, பிள்ளையாரை பிரார்த்தனை செய்து, நூல் கண்டு தீரும் வரை பிள்ளையாரை சுற்றிவந்தால் உடலில் உள்ள பிணிகள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!
News August 12, 2025
கோவை: 126 பணியிடங்கள்.. அரசு வேலை வேண்டுமா?

கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <