News March 20, 2024
இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க <
Similar News
News November 3, 2025
திருவாரூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
திருவாரூர்: 2.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மண்டலத்தில் இந்த வருடம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குருவைப் பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் நேற்று (நவம்பர் 2) வரை 2.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை ரூ.6.15 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அதன் மூலமாக 33,291 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
திருவாரூர்: ரூ.40 லட்சம் மோசடி செய்த நபர் கைது

மன்னார்குடி நாவல் பூண்டியைச் சேர்ந்த வாணிதாசன் (30) சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலைகளுக்காக அனுப்பி வைக்கும் பணியை செய்துவருகிறார். அதன்படி சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி கலைமணி என்பவரிடம் ரூ.22 லட்சம், சபரிசன் என்பவரிடம் ரூ.4.15 லட்சம், விக்னேஷ் என்பவரிடம் ரூ.5 லட்சம், தினேஷ் என்பவரிடம் ரூ.4 லட்சம் என மொத்தமாக ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக போலீசார் வாணிதாசனை கைது செய்துள்ளனர்.


