News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News December 26, 2025
தூத்துக்குடி: சாலை விபத்தில் ஒருவர் பலி

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் முத்து (29). இவர் நேற்று இரவு அம்பலசேரியில் இருந்து கட்டாயமங்கலம் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 26, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை அவசர நேரங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News December 25, 2025
தூத்துக்குடி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

தூத்துக்குடி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்கள், பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில்(0461 – 2271143) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.


