News March 20, 2024

இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

Similar News

News August 8, 2025

வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியவை

image

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

News August 8, 2025

தருமபுரியில் வரலட்சுமி நோன்பிற்கு இதை செய்யுங்க

image

வரலட்சுமி நோன்பு, லட்சுமி தேவியின் அருளை வேண்டி சுமங்கலிப் பெண்கள் அனுசரிக்கும் ஒரு புனிதமான விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஆக்.08) தருமபுயில் உள்ள மகாலட்சுமி சமேத பரவாசுதேவப் பெருமாள் கோயில் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை விமர்சையாக இங்கு நடைபெறும். ஷேர் <<17338875>>தொடர்ச்சி<<>>

News August 8, 2025

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தர்மபுரி வருகை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 17, 2025 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் நேரில் வழங்கவுள்ளார். தர்மபுரி மாவட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.

error: Content is protected !!